கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு இரு சக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர் வாணியம்பாடியில் இருந்த தனது மனைவி, 12 வயது மகள், 2 மகன்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரி அருகே இரு சக்கர வாகனம் வந்தபோது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்து கொண்டிருந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த 5 பேரும் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.