ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கன்னியாகுமரியில் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரியும், ஈழத்தமிழர்களை பாதுகாக்க கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசை படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தனர்.
வேலை நிறுத்தம் காரணமாக இங்குள்ள 350-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கடலுக்கு செல்லவில்லை.