நடிகர் நாகேஷ் மரணத்துக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கலைத் துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சத்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் இயற்கை அடைந்த செய்தினை அறிந்து பெருந்துயருற்றேன்.
தனிச்சிறப்பான நகைச்சுவையாலும் பல திறப்பட்ட நடிப்பாற்றலாலும், தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ். தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர்.
தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர். நாகேசின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.