கடந்த 10 நாட்களாக நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் அவைத் தலைவர் ஆவுடையப்பன் தள்ளி வைத்தார்.
சென்னை : தமிழகத்தின் 13வது சட்டப்பேரவையின் 10வது கூட்டத் தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை நிகழ்த்தினார்.
இறுதிநாளான நேற்று ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
பின்னர் தேதி குறிப்பிடாமல் அவை தள்ளி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஆவுடையப்பன் அறிவித்தார்.