திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல்நிலைய எல்லையில் ஸ்கூட்டர் மீதும், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீதும் லாரி ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
செங்கல் சூளையில் இருந்து கவால்சேரி என்ற இடத்தை நோக்கி அந்த லாரி சென்று கொண்டிருந்த போது, இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டதாகவும், ஸ்கூட்டரில் சென்ற ஜெயக்குமார் (வயது 29), அவரது மனைவி பத்மா(25) இருவரும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனிக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
தவிர கவால்சேரி பகுதியில் நடந்து சென்ற் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி இருவர் மீதும் லாரி மோதியதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயம் அடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுனர் குப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.