முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் என்று குற்றம்சாற்றினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமரன் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது என்றார்.
சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாற்றிய திருமாவளவன், தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது, அந்த அளவுக்கு இந்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றார்.
முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த திருமாவளவன், முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் என்று குற்றம்சாற்றினார்.