பேரறிஞர் அண்ணா நினைவு நாளையட்டி பிப்ரவரி 3ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தி.மு.க மாவட்ட செயலர்கள் அன்பழகன், பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 40வது நினைவு நாள் பிப்ரவரி 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்று காலை 7 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சேப்பாக்கம் தொகுதி அலுவலகத்தில் இருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடத்தப்படும்.
பின்னர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
அமைதி பேரணியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.