Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக 7வது நாளாக மாணவ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்

இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக 7வது நாளாக மாணவ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்
சென்னை , புதன், 28 ஜனவரி 2009 (12:07 IST)
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 7வதநாளாஇ‌ன்று‌மஉண்ணாவிரதம் மேற்கொண்டு‌ள்ளன‌ர். இத‌னிடையே மய‌க்க‌ம் அடை‌ந்த மேலு‌ம் 4 மாணவ‌ர்க‌ள் செ‌‌ங்க‌ல்ப‌ட்டு அரசு மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த கோரி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர், கல்லூரி வளாகம் முன்பு கட‌ந்த 22ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்களை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

நே‌ற்று மு‌ன்‌தின‌‌ம் ஆறுமுக நயினார், ஜம்புகுமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் துரியன், திருமுருகன், முனிஷ்குமார், நவீன் ஆகிய மாணவர்கள் நே‌ற்று மாலை மயங்கி ‌விழு‌ந்தனர். உடனடியாக அவ‌ர்க‌ள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டன‌ர். அவ‌ர்கள் மருந்து மாத்திரை சாப்பிட மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்படுகிறது.

மாணவ‌ர்க‌ள் விஜயகுமார், பிரவீன், சுரேஷ், ராஜ்குமார், மணிவேல், முஜிபுர் ரக்மான், ராஜா, மூர்த்தி ஆகியோர் மட்டும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மரு‌த்துவ‌ர்க‌ள் அங்கேயே தங்கி இருக்கின்றனர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைத்துள்ளனர். அவ்வப்போது, மாணவர்களின் உடலை பரிசோதனை செய்கின்றனர்.

நே‌ற்று மாலை நடிகர் வடிவேலு, இயக்குனர்கள் சுந்தர்.சி, மனோபாலா, ஆர்.கே.செல்வமணி, சரவண சுப்பையா, கவுதம் ஆகியோர் செ‌ங்க‌ல்ப‌ட்டு அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மாணவர்களிடம் உடல் நலம் விசாரித்தனர்.

பின்னர் அவ‌ர்க‌ள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்றன‌ர். அங்கு உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களிடமும், உண்ணாவிரதத்தை கை‌விடு‌ம்படி கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

ஆனா‌ல் மாணவ‌ர்க‌ள் "யார் சொன்னாலும் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். எங்களை போன்ற மாணவர்கள் வேறு யாராவது, இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே, போராட்டத்தை கை விடுவோம்'' என்று தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதனிடையே வகுப்பு ரத்து இ‌ன்று செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர் ஜனார்த்தனம் அறிவித்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil