ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. ஒன்றாக இணைப்பு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
மூன்று மாவட்டங்களாக செயல்பட்டு வந்த ஈரோடு தே.மு.தி.க. ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட தே.மு.தி.க தொடக்கத்தில் ஒரே மாவட்டமாக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஈரோடு மத்திய மாவட்டம், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டு மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.
தற்போது இந்த மூன்று மாவட்டங்களையும் கலைத்து ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டமாக செயல்படும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக கட்சியின் கொள்கைபரப்பு செயலராக வி.சி.சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.