தை அமாவாசை: பண்ணாரி கோவிலில் பக்தர்கள் கூட்டம்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
தை அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள அம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு வழக்கமாக பக்தர்கள் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக காணப்படும். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காலை ஆறு மணிக்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கதொடங்கினர்.
அம்மனுக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இரவு எட்டு மணிவரை பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
இதேபோல் சத்தியமல்கலம் பவானீஸ்வரர் கோவில், கருடஸ்தம்ப ஆஞ்சனேயர் கோவில், வரசித்தி வினாயகர் மற்றும் தவளகிரி தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடினார்கள். ஆற்றின் கரையில் பலர் தங்கள் மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.