தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் எழுத்தாளர் ஜெயகாந்தன், நாட்டியத் தம்பதி வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், விஞ்ஞானி ஆர்.சேஷாத்ரி, சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி, சமூக சேவகி டாக்டர் சரோஜினி வரதப்பன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.
தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், நடிகர் விவேக், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், செய்திப்படத் தயாரிப்பாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி, மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர்கள் பி.ஆர்.கிருஷ்ணகுமார், ஆர்.சிவராமன், ஷேக் காதர் நூருதீன், தொழில்துறையைச் சேர்ந்த ஆறுமுகம் சக்திவேல், பேராசிரியர் முனைவர் தணிகாசலம் சடகோபன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.