இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதால் மிகவும் சோர்வாக காணபட்டனர்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் மல்லை சத்யா, திரைப்பட நடிகர் சத்யராஜ், இயக்குனர் செல்வமணி, கவுதமன் ஆகியோர் இன்று செங்கல்பட்டுக்கு சென்றனர். அவர்கள் உண்ணாவிரத பந்தலில் சட்டக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.