Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக பேசவில்லையா? ஜெ.வுக்கு கருணா‌நி‌தி கேள்வி

Advertiesment
இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக பேசவில்லையா? ஜெ.வுக்கு கருணா‌நி‌தி கேள்வி
செ‌ன்னை , சனி, 24 ஜனவரி 2009 (17:42 IST)
இலங்கை‌தமிழர்களகொல்வேண்டுமஎன்றஇலங்கராணுவமஎண்ணவில்லஎன்றஜெயலலிதகூறியிருப்பதஇலங்கராணுவத்திற்கஆதரவாவார்த்தைகளஇல்லையஎன்றமுதலமை‌ச்ச‌ரகருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இன்று வெளியிட்டு‌ள்ள கேள்வி - பதில் அறிக்கை :

இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக தான் பேசவில்லை என்றும் அப்படி மாய தோற்றத்தை உருவாக்க சில தீய சக்திகள் முயல்வதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

''இலங்கை வேறு நாடு. அந்த நாட்டு பிரசசனையில் தலையிடுவதில் ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற நாடு இன்னும் அமையவில்லை. இலங்கை‌த் தமிழரை கொல்ல வேண்டும் என்று சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல'' என்று ஜெயலலிதா அளித்த பேட்டி 18ஆம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.

இலங்கை‌த் தமிழரை கொல்ல சிங்கள ராணுவம் எண்ணவில்லை என்று அவர் சொன்னது இலங்கை ராணுவத்துக்கு ஆதரவான வார்த்தைகள் இல்லையா? ஜெயலலிதா முதலில் ஒன்றை சொல்வதும் பிறகு, அப்படி சொல்லவே இல்லை என்று வாபஸ் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. இதுதான் கபட நாடகம். இது புரியாமல் பன்னீர்செல்வம் எதையோ நாடகம் என்றும் அதில் நடிக்க தான் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் படுகொலைக்கே விடுதலை‌ப் புலிகள்தான் காரணம் என்று அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இலங்கை‌தமிழருக்காக கருணாநிதி திரட்டிய நிதி, அந்த மக்களுக்கு போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அதை கருணாநிதி தன் குடும்ப நிதியில் சேர்த்துக்கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை பற்றி?

அமெரிக்காவில் இருந்து வந்த ரூ.1 கோடிக்கான காசோலைகள் யாரிடம் இருந்து வந்தது என்றே தெரியாததால் தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன் என்று நீதிமன்றத்திலேயே சொன்னவர் அல்லவா. 'தான் திருடி, பிறரை நம்பாள்' என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்வாறு கூறியுள்ளார். அந்த நிவாரண பொருட்கள் எல்லாம் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியோடு, பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன என்று பல நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

இலங்கை‌தமிழர் நிவாரண நிதியை பொருத்தவரை, ஒவ்வொருவரிடம் இருந்தும் காசோலையாகத்தான் வாங்கப்பட்டதே தவிர, யாரும் தொகையாக வழங்கவில்லை. என்னிடம் உதவி வழங்கிய அனைவரது பெயரும் ஏடுகளில் வெளியிடப்பட்டது. அந்த நிதி ஒவ்வொரு நாளும் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு அரசு இருப்பில் செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கியதுபோக, மீத நிதி இன்றளவும் அரசு கணக்கில் இருக்கிறது.

மேலும், யாழ்ப்பாணம் பிஷப் டாக்டர் தாமஸ் சவுந்தரநாயகம் என்பவர் எழுதிய கடிதம் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மூலமாக இன்று கிடைத்தது. ''இந்திய அரசால் வழங்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைத்தது. ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்கள் அதில் இருந்தன. சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. போர் நடந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக மக்களிடம் இருந்து வந்த நன்கொடை பொருட்களை இலங்கை‌தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்' என்று அதில் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது என்ற தலைப்பில் நீங்கள் தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை காட்ட முன்வராமல் அ.ி.ு.க.வினர் வெளிநடப்பு செய்ததும் அவர்களை ம.ி.ு.க பின்பற்றியதும் பற்றி?

இன்னும் தமிழ் இனம் நெல்லிக்காய் மூட்டையாகத்தான் இருக்கிறது என்று எண்ணி நெஞ்சம் பதைபதைக்கிறேன்.

இலங்கை‌தமிழர் பிரச்சனை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை. இதில் தி.ு.க செயற்குழுவை மட்டும் கூட்டி முடிவெடுப்பது சரியல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

ி.ு.க ஜனநாயக இயக்கம். அதன் தலைவராக நான் இருந்தபோதிலும் சில முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துவிட முடியாது. முடிவுகளை எடுக்கலாம் என்றபோதிலும் நான் அவ்வாறு சர்வாதிகாரமாக நடந்துகொள்வதில்லை. முதலில் கட்சியில் முடிவெடுத்து பின்னர் அனைத்து‌கட்சிகளையோ, தோழமை கட்சிகளையோ கலந்தாலோசித்துதான் முடிவு அறிவிப்போம். அனைத்து‌கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ளும் கட்சியினர்கூட, முன்னதாக தங்கள் கட்சிக்குள் விவாதித்து ஒரு முடிவு எடுத்துக்கொண்டுதான் வருவார்கள்.

சட்ட‌சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற தலைவர் கூறும்போது ''காங்கிரஸ் அரசையும் மைய அரசையும் தமிழக அரசு பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என தெரிகிறது'' என்று கூறியிருக்கிறாரே?

ஆம். தி.ு.க.வோடு தோழமை கொண்டுள்ள கூட்டணியில் உள்ள கட்சியின் அரசுதான் காங்கிரஸ் அரசு. கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும் என தி.ு.க நினைப்பது தவறல்லவே எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil