சென்னை அண்ணா பன்னாட்டு விமானத்தில் இருந்து அயல்நாட்டுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதை பொருளைக் கடத்த முயன்ற இலங்கை வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இலங்கை வவுனியாவை சேர்ந்தவர் பாலசிங்கம் (30). இவர் சிறிலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்வதற்காக நேற்றிரவு 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருக்கு சொந்தமான வயலின் இசைக்கருவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ ஹெராயினை கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுங்கத்துறையினர், விமானநிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.