இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை இராணுவத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் எம்.சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.சேதுராமன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பட்டது.