Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க சவர தொழிலாளர்கள் கோரிக்கை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌‌மி

Advertiesment
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க சவர தொழிலாளர்கள் கோரிக்கை
சவரத்தொழிலாளர்கள் இனத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில தலைவராக முனுசாமி, பொதுசெயலாளராக செல்வராஜ், பொருளாளராக ராமலிங்கம், அமைப்பு செயலாளராக தனபால், கொள்ளைபரப்பு செயலாளராக ராக்கிகிருஷ்ணன், செய்தி தொடர்பாளராக மகேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட தீர்மான‌த்‌தி‌ல், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்கும் வண்ணம் சவரத்தொழிலாளர்கள் இனமான இந்து மருத்துவர் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

முடிதிருத்தும் நிலையங்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கவேண்டும். ஆண்களுக்கு அழகுகலை பயிற்சி கல்லூரி தொடங்கப்பட்டு அதன்மூலம் அழகு கலை பயிற்சி அளிக்க வேண்டும் எ‌ன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil