தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு மேலும் ஒரு பதவியை தி.மு.க. வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களாக, கட்சியின் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க.அழகிரி, அமைப்புச் செயலர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாண சுந்தரம் ஆகியோருடன் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஏ.எல்.சுப்பிரமணியம், நாகநாதன், தயாநிதி மாறன், பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, குப்புசாமி, மாதவன், சுப.தங்கவேலன், ஜி.எம்.ஷா, கோவை ராமநாதன், நேரு, ஐ.பெரியசாமி, ஏ.டி.கே.ஜெயசீலன் ஆகியோர் உள்ளனர்.
தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல் : அமைப்புச் செயலர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாண சுந்தரம்; சட்டத் துறை செயலர் ஆலந்தூர் பாரதி, கொள்கை பரப்புச் செயலர் ஆ.ராசா, திருச்சி சிவா, தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர்கள் ரகுமான்கான், விடுதலை விரும்பி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் என்.ஜோதி, தலைமைக் கழக வழக்கறிஞர்கள் பரந்தாமன், தண்டபாணி, ரவிச்சந்திரன்.
இளைஞர் அணிச் செயலர் மு.க.ஸ்டாலின், துணைச் செயலர் மா.சுப்பிரமணியன், சுகவனம், சேலம் ராஜேந்திரன், சுப.த.சம்பத், சந்திரசேகர், தேர்தல் பணிச் செயலர்கள் கம்பம் செல்வேந்திரன், ரகுபதி, சேடப்பட்டி முத்தையா, அரங்கநாயகம், செல்வகணபதி, முபாரக், பார்.இளங்கோவன், விவசாய அணித் தலைவர் என்.கே.கே.பெரியசாமி, தொண்டர் அணிச் செயலர் உமாபதி, மாணவர் அணிச் செயலர் கடலூர் புகழேந்தி, கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் கனிமொழி, செயலர்கள் பூங்கோதை, தமிழச்சி தங்கபாண்டியன், இலக்கிய அணி புரவலர் நன்னன், தலைவர் வேழவேந்தன்.
மகளிர் அணிப் புரவலர் இந்திரகுமாரி, தலைவர் நூர்ஜகான் பேகம், துணைத் தலைவர்கள் காஞ்சனா கமலநாதன், விஜயா தாயன்பன், செயலர் புதுக்கோட்டை விஜயா, மகளிர் அணி பிரசாரக் குழு செயலர்கள் பவானி ராஜேந்திரன், சங்கரி நாராயணன், நளினி சாரங்கன், சித்திரமுகி சத்தியவாணிமுத்து, வாசுகி ரமணன், ரொக்கையா மாலிக் என்ற சல்மா ஆகியோர் கொண்ட பட்டியலை அன்பழகன் வெளியிட்டுள்ளார்.