இலங்கையில் போரை நிறுத்தி அமைதிப் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசிற்கு மீண்டும் ஒரு காலக்கெடுவை முதல்வர் நிர்ணயிக்க வேண்டும் என்று பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில், தலைவர் கோ.கா. மணி தலைமையில், திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரத்தில் நடந்தது.
அதில், இலங்கையில் போரை நிறுத்தி அமைதி பேச்சு நடத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள மீண்டும் ஒரு காலக்கெடுவை முதலமைச்சர் கருணாநிதி நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை, அரசியல் நிலவரம், சென்னையில் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற இருக்கும் பாட்டாளி இளைஞர் அணியின் மாநில மாநாடு மற்றும் அதற்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.