அரியலூர் மாவட்டம் தேளூர் சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள்.
விளாங்குடி கிராமத்தில் இருந்து சொந்த ஊரான ஆதிச்சலூருக்கு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்து போன 3 வாலிபர்களின் பெயர் வெங்கடேஷ், பாஸ்கர், தங்கத்துரை என தெரியவந்துள்ளது.
3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.