Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 4 March 2025
webdunia

கடு‌ம் வற‌ட்‌சி‌யி‌ல் சத்தியமங்கலம் வனப்பகுதி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
கடு‌ம் வற‌ட்‌சி‌யி‌ல் சத்தியமங்கலம் வனப்பகுதி
ஈரோடு , வியாழன், 22 ஜனவரி 2009 (12:36 IST)
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதி சுமார் 6,000 ஹெக்டர் பரப்பளவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த வனப்பகுதியை வனவிலங்கு சரணாலயங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதி எப்போது பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இந்த வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வனப்பகுதி‌யி‌ல் உள்ள குளம், குட்டைகள் காய்ந்து விட்டது. இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் ஆங்காங்கே தீ பிடித்து எரியும் சம்பவமும் நடக்கிறது.

இதை தடுக்க சத்தி மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம் தலைமையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil