Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு அருகே கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
ஈரோடு அருகே கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்க எதிர்ப்பு
ஈரோடு , வியாழன், 22 ஜனவரி 2009 (12:35 IST)
ஈரோடு அருகே கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்க விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அலங்கியம் அருகே உள்ளது அத்திமரத்துவலசு. இங்கு இரண்டு கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனம் அமைந்தால் இதன் கழிவுகள் அமராவதி ஆற்றில் கலக்கும் என்பதால் இந்த நிறுவனங்களுக்கு விவசாயிகள் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் பழனிசாமி தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், அலங்கியம் தடுப்பணை அருகே சுமார் 120 ஏக்கரில் இரண்டு கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆற்றிற்கு பாதிப்பு ஏற்படும்.

இதன் காரணமாக இந்த ஆற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இந்த நிறுவனத்தை தடைசெய்யவேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil