திண்டுக்கல்லில் காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடியை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
திண்டுக்கலை சேர்ந்த பிரபல ரவுடி செல்வேந்திரன். இவன் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக ரவுடி செல்வேந்திரனை காவல்துறையினர் இன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென காவல்துறையினர் தாக்கி விட்டு ரவுடி செல்வேந்திரன் தப்பிக்க முயன்றான்.
அப்போது காவல்துறையினர் ரவுடி செல்வேந்திரனை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த காவலர் ஒருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.