தமிழக சட்டப் பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் பேரவை தொடங்குகிறது.
பின்னர், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், பேரவை நடைபெறும் நாட்கள் முடிவு செய்யப்படும்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங், விருதுநகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.சீனிவாசன் உள்ளிட்டோர் மறைவுக்கு பேரவையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கூட்டத் தொடரில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற மார்ச் மாத இறுதியில் முடிவடையும் என்று தெரிகிறது.