Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்தியூர் வனத்தில் மீண்டும் ஒரு பெண் யானை சாவு

ஈரோடு செ‌‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
அந்தியூர் வனத்தில் மீண்டும் ஒரு பெண் யானை சாவு
அந்தியூர் வனப்பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண் யானை இறந்ததை‌ததொட‌ர்‌ந்ததற்போது மீண்டு‌ஒரு பெண் யானை இறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் கடந்த வாரம் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு நோய்வாய்பட்டு சுமார் இருபத்தி ஐந்து வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்தது. தற்போது அந்தியூர் வனப்பகுதி செல்லப்பம்பாளையம் கிழக்கு வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

webdunia photoWD
இந்த தகவலில்பேரில் வனத்துறை அதிகாரி ஜெகநாதன் தலைமையில் வனத்துறையினர் ‌‌நிக‌ழ்‌விடத்திற்கு சென்று இறந்த யானையை பார்த்தனர். அப்போது புதரில் இருந்து சுமார் மூன்று வயது மதிக்கதக்க இறந்த யானையின் ஆண்குட்டியானை வனத்துறையினரை துரத்தியது.

இதனால் வனத்துறையினர் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். அ‌ப்போதநூறு மீட்டர் துரத்தில் யானை கூட்டம் ஒன்று நின்றுகொண்டு இறந்த யானையை கவனித்துக்கொண்டிருந்தது. இதனால் பயந்துபோன வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை துரத்தினர்.

பின்ன‌ரஇறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தபா‌‌ர்‌த்த‌தி‌லநோய்வாய்பட்டு இறந்தது தெரியவந்தது. இதற்கும் சுமார் இருபத்தி ஐந்து வயது இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். அடர்ந்த வனப்பகுதயில் யானை இறந்துகிடந்ததால் இதன் உடல் மற்ற உயிரினங்களுக்கு இறைக்காக விடப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil