பேருந்துகளுக்கு தீ வைப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், பேருந்துகளை சேதப்படுத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது அமைதிக்கும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கும், உடமைகளுக்கும் ஏற்படுகின்ற இழப்பை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், வன்முறை நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்று வரும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், யாராவது பேருந்துகளை எரிக்க முயன்றாலோ அல்லது பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க முயன்றாலோ அவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி.) மாசான முத்து தெரிவித்துள்ளார்.