திருச்சி: திருச்சி ரயில் நிலையம் அருகே சென்னை- குருவாயூர் விரைவு ரயில் மீது யார்டுக்கு சென்ற ரயில் என்ஜின் மோதிய விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் 2 பெட்டிகள் கடும் சேதம் அடைந்ததுடன் அதில் இருந்த 5 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.