தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நாகை மாவட்டம் மணல்மேட்டில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, கும்பகோணம், திருக்காட்டுபள்ளி, திருவையாறு, திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி, புல்லம்பாடி ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.