மொத்தம் ரூபாய் 800 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பைகோட்டை அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி அன்று நடத்தப்படும் என்று நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.