தமிழில் சிறந்த நூல்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் 2007ல் வெளியிடப்பட்ட புத்தகங்கள் போட்டியில் பங்குபெற்றன. மரபுக் கவிதை, புதினம், சிறுகவிதை, திறனாய்வு உள்ளிட்ட 31 பிரிவுகளின் கீழ் நூல்கள் போட்டிக்கு வந்தன.
இவற்றை உயர்நிலைக் குழு பரிசீலனை செய்தது. 31 பிரிவுகளில் 3 பிரிவுகளுக்கான போட்டியில் தலா ஒரு புத்தகம் மட்டுமே வந்ததால் அவை தேர்வு செய்யப்பட்டதாக கருதப்படவில்லை. எனவே, 28 புத்தகங்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.