ஈரோடு அருகே உயிருக்கு போராடும் யானை : காப்பாற்ற வனத்துறையினர் தீவிரம்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு அருகே நோய்வாய்பட்டு உயிருக்கு போராடும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் தீவிரமுயற்சி செய்து வருகின்றனர்.
ஈரோடு அருகே உள்ளது அந்தியூர் வனப்பகுதி. இங்கு நேற்று ஒரு பெண் யானை நோய்வாய்பட்டு உயிருக்கு போராடி வருவது அந்தியூர் வனத்துறையினருக்கு தெரியவந்தது. உடனே மண்டல வனப்பாதுகாவலர் துரைராசு உத்தரவின்பேரில் வனத்துறையினர் உயிருக்கு போராடும் யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.
கால்நடைமருத்துவர் ரவிச்சந்திரன் மற்றும் அந்தியூர் வனசரகர் குப்புசாமி ஆகியோர் தலைமையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், இந்தயானை குட்டிஈன்று ஏழு மாதங்கள் இருக்கலாம். இதனால் இதற்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடக்கும்போது தடுமாறி விழுந்து எழுந்து நிற்கமுடியாமல் போனது. இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின் யானை எழுந்து நடக்க வாய்ப்புள்ளது என்றார்.