திருமங்கலம் இடைத்தேர்தலில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் முன்னணிலையில் இருந்து வருகிறார்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்து வருகிறார்.
தி.மு.க. வேட்பாளர் 30,736 வாக்குகள் பெற்று இருந்தார். அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் 13,317 வாக்குகள் பெற்று இருந்தார்.
தே.மு.தி.க. வேட்பாளர் 1,672 வாக்குகளும், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் 74 வாக்குகளும் பெற்றுள்ளனர்.