Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை ச‌ங்கம‌ம் கோலாகல‌த் துவ‌க்க‌ம்! ‌சிவம‌ணி அ‌ல்ல ‌ஜீவ ம‌ணி - கருணா‌நி‌தி

Advertiesment
செ‌ன்னை ச‌ங்கம‌ம் கோலாகல‌த் துவ‌க்க‌ம்! ‌சிவம‌ணி அ‌ல்ல ‌ஜீவ ம‌ணி - கருணா‌நி‌தி
, ஞாயிறு, 11 ஜனவரி 2009 (14:02 IST)
சென்னை சங்கமம் திருவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று கோலாகலமாகத் துவங்கியது!

இவ்விழாவில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, மத்திய அமைச்சர் வயலார் ரவி உ‌ள்‌ளி‌ட்ட பல‌ர் கலந்துகொண்டனர்.

நேற்றைய தொடக்க விழாவில் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுமார் 2 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, சென்னை சங்கமம் திருவிழாவை தெரு விழா என்று அழகாகச் சுட்டிக்காட்டிய என் மகள் கனிமொழி, இவ்விழாவை இன்றைக்கு பெருவிழாவாகவே ஆக்கியிருப்பதைக் கண்டு பெருமையடைகிறேன். திருமங்கலம் எப்படி எனக்கு நல்ல செய்தி சொல்லப் போகிறதோ, அதைப்போல இந்தத் திருவிழாவும், பெருவிழாவாக மாறி நல்ல செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதுபோன்ற கலை விழாக்களுக்கு நிதியுதவி செய்வதாக கடந்த வருடம் அமைச்சர் அம்பிகா சோனி கூறியிருந்தார். ஒருவேளை மறந்திருக்கக்கூடும். டெல்லி அமைச்சர்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் ஞாபகப்படுத்தவில்லை என்று நம்மையே குற்றம் சாட்டுவார்கள். அதனால் இந்த மேடையில் உங்களை எல்லாம் சாட்சியாக வைத்துக் கொண்டு, கடந்த ஆண்டு சொன்னீர்களே, அதைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிவமணி அல்ல ஜீவ மணி

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள், எல்லோருடைய கலை நுணுக்கமும் நம் உள்ளத்தில் பதிந்திருந்தாலும்கூட, மறக்க முடியாத மனிதர் சிவமணி என்பதை சொல்லித்தான் தீரவேண்டும்.

இவ்வளவு தாளக்கட்டு, ராகம், பாவம் இவைகளோடு எப்படித்தான் இணைந்து ஒலிக்கிறது என்று எண்ணும்போது, நானும் இசைக் குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில் ஆச்சரியப்படுகிறேன். அவர் இங்கு நடத்திக் காட்டிய அற்புதமான ஒலி முழக்கம், மின்னல்களை, இடிகளை, அருவியின் ஒலிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற ஒரு அற்புத மனிதர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர் வெறும் சிவமணி அல்ல, ஜீவ மணி என்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி பாராட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil