Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமங்கலத்தில் 88.89 ‌விழு‌க்காடு வாக்குப்பதிவு!

Advertiesment
திருமங்கலத்தில் 88.89 ‌விழு‌க்காடு வாக்குப்பதிவு!
மதுரை , சனி, 10 ஜனவரி 2009 (09:41 IST)
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 88.89 ‌விழு‌க்காடு வாக்குகள் பாதிவாயின.

திருமங்கலம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,55,647. இதில் ஆண்கள் 76,726 பேர். பெண்கள் 78,921 பேர். இத்தொகுதி ம.ி.ு.ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் வீரஇளவரசன் இறந்ததால் நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

ி.ு.க சார்பில் லதாஅதியமான், அ.இ.அ.ி.ு.க.வில் முத்துராமலிங்கம், தே.ு.ி.க தனபாண்டியன், ச.ம.க பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு நேற்று நடந்தது. மொத்தம் 190 வாக்குச்சாவடிகளிலும் காலை 6.30 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெண் வாக்காளர்கள் அதிகளவில் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

செக்கானூரணி, கள்ளிக்குடி, குராயூர் உட்பட 15க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடி எண் சரியாக குறிப்பிடப்படாதது, மின்னணு இயந்திர பழுது போன்ற காரணத்தால் வாக்குப்பதிவு தொடங்க 15 நிமிடம் தாமதமானது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, தேர்தல் பார்வையாளர்கள் சுனில்குமார் குஜூர், ஆனந்த்சிங் ஆகியோர் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று பார்வையிட்டனர். அசம்பாவிதம் எதுவும் இன்றி அமைதியாக சில வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடந்தது.

88.89 ‌விழு‌க்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக திருமங்கலம் தொகுதியின் தேர்தல் அதிகாரியான மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் கூறினார்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பல‌த்த பாதுகாப்புடன் லாரி மூலமாக மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, துணை ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil