இலங்கை அகதிகள் முகாமில் திடீர் ஆய்வு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் மற்றும் பவானிசாகரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாம் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அகதிகள் நாள்தோறும் இப்பகுதியில் உள்ள விவசாய கூலி மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்றுவிட்டு மாலையில் முகாமிற்கு வந்துவிடுவார்கள்.
இவர்கள் இங்குள்ள வருவாய் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு கையெழுத்து போட்டுவிட்டுத்தான் முகாமைவிட்டு வெளியே செல்லமுடியும்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி மாயகிருஷ்ணன் திடீரென இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்தார். முகாமில் ஏற்கனவே இருக்கும் மக்கள் சரியாக உள்ளார்களா புதிய நபர்கள் யாராவது ஊடுருவி உள்ளார்களாக என ஆய்வு செய்தார்.