தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கூட்டமாக இருப்பதால் தொடக்க நாளில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சட்டப்பேரவையில் உரை நிகழ்த்துகிறார்.
அன்று காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்கும். முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்திய பின்பு, ஒரு வார காலத்துக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெறும். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.