Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயல‌‌லிதா கூறுவது அவரது அ‌றியாமையை கா‌ட்டு‌கிறது : கருணா‌நி‌தி

Advertiesment
ஜெயல‌‌லிதா கூறுவது அவரது அ‌றியாமையை கா‌ட்டு‌கிறது : கருணா‌நி‌தி
ஓட்டுகளை மாற்றிப்போடுகிற இய‌ந்‌திர‌த்‌தினை கண்டுபிடித்திருக்கிறார்கள், இலைக்கு போட்டால் அது உதயசூரியனுக்கு வருவது போல ஒரு புதிய தகவலை பழைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூ‌றினா‌ர்.

webdunia photoFILE
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் லதா அதியமானை ஆதரித்து நே‌ற்‌றிரவு நட‌ந்த ‌பிரசார பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் முதலமைச்சர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், திருமங்கலம் தொகுதி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட தொகுதி. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தற்போது நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினராக உள்ள என்.எஸ்.வி. சித்தன் போட்டியிடும் போதெல்லாம் நான் தவறாமல் வந்து அவருக்காகப் பிரசாரம் செய்து பேசியிருக்கிறேன். பல தியாகிகளை திருமங்கலம் உருவாக்கியிருக்கிறது.

இரண்டு, மூன்று நாட்களாக பத்திரிகைகளை பார்க்கும்போது எனக்கு பெரும் வருத்தம். வேதனை. நம்மோடு இவர்கள் இருந்தபோது எவ்வளவு விவரம் தெரிந்தவர்களாக இருந்தார்கள். தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக எந்த அளவுக்கு குரல் கொடுப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் இப்போது என்ன ஆகிவிட்டார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் போது ஏற்படுகின்ற வருத்தத்தை தான் நான் சொல்கிறேன்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எழுச்சி நாள் கூட்டத்தை கூட்டினோம். அதில் என்னோடு இருந்தவர்கள் எங்களை விட அதிகமாக சேது சமுத்திர திட்டத்தை பேசியவர்கள் இன்று சேது சமுத்திர திட்டத்தை இப்போது மறந்து விட்டார்கள். மறந்தால் கூட பரவாயில்லை. எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிற அம்மையாரோடு கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தல் யார் யாரையெல்லாம், எப்படியெல்லாம் அடையாளம் காட்டியிருக்கிறது.

இந்த திருமங்கலத்தில்தான் பொடா சட்டம் அதிகார துஷ்பிரயோகம் செய்து பயன்படுத்தப்பட்டது. பொடாவுக்கு எதிராக, முரணாக பேசினார் என்று குற்றம்சா‌ற்ற‌ப்‌பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இளவரசுவும் கூட. அப்போது அந்த கட்சியைச் சேர்ந்த தளகத்தர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் என்னிடம் வந்து ம.தி.மு.க. தலைவரை விடுதலை செய்ய லட்சக்கணக்கான கையெழுத்துக்களை பெற இருக்கிறோம். அதில் முதல் கையெழுத்து நீங்கள் போட வேண்டும் என்றனர். அதாவது கோபால்சாமியை, மன்னிக்க வேண்டும், கோபால்சாமி என்றால் அவருக்கு கோபம் வரும். வைகோவை விடுதலை செய்ய முதல் கையெழுத்து என்னிடம் கேட்டார்கள்.

எதற்கு முதல் கையெழுத்து, தி.மு.க.வை பிளந்து கொண்டு வேறு ஒரு கட்சி ம.தி.மு.க.வை தொடங்கிய நண்பர்கள் ஜெயலலிதா ஆட்சியிலே பொடா சட்டத்தில் சிறையிலே அடைக்கப்பட, அந்த சூழ்நிலையில், சூனியக்காரி என்னை சிறையிலே போட்டுவிட்டாள், சூழ்ச்சிக்காரி என்னை காராகிரகத்திலே போட்டு விட்டாள், என்றெல்லாம் எனக்கே எழுத தெரியாத வீர வசனத்தை பேசி விட்டு சிறையிலே இருந்தவர்களை விடுவிக்க முதல் கையெழுத்து போட்டது இந்த மு.கருணாநிதிதான்.

ஓட்டுகளை மாற்றிப்போடுகிற இய‌ந்‌திர‌த்‌தினை கண்டுபிடித்திருக்கிறார்கள், இலைக்கு போட்டால் அது உதயசூரியனுக்கு வருவது போல ஒரு புதிய தகவலை பழைய முதலமைச்சர் ஜெயலலிதா இங்கு தெரிவித்திருந்தார். தேர்தல் முடிவு அவர்களுக்கு தெரிந்து விட்டது போலும். ஆகவே இப்படி ஒரு பொய்யை சொல்கிறார்கள் என்று எண்ணினேன். இப்போது அந்த பொய்யை வைகோவும் சொல்லியிருக்கிறார். பாண்டியனும் சொல்லியிருக்கிறார். அவர் ஒரு படி மேலேயே போய் கேவலமாக சொல்லியிருக்கிறார்.

வாக்குகளை பிராடு செய்ய இந்த கட்சியிலே பணியாற்றுகிறவர்கள், தேர்தல் பணிக்குழுவிலே இருப்பவர்கள், தேர்தலை நடத்துகிறவர்கள், நாங்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவியோடு, காவல்துறை உதவியோடு, வாக்களிக்கின்ற பெட்டியிலே இருக்கின்ற ஓட்டுக்களை தங்களுக்கு மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்று இன்றைக்கு தெரிவித்திருக்கிறார்.

நான் கேட்கிறேன், இப்படி ஒரு வித்தை இருப்பது தெரிந்தால் இடைக்காலத்தில் இரண்டு, மூன்று முறை தோற்றோமே, ஆட்சியை பறிகொடுத்தோமே, அப்போதே அந்த காரியத்தை செய்திருக்கலாமே. அப்படியானால் சென்ற முறை ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததற்கு காரணம், அப்போது இந்த முறையை அவர் செய்தாரா? எவ்வளவு விபரீதமான, வேடிக்கையான, கேட்பதற்கே வெட்கக் கேடான ஒரு விவகாரத்தை இன்றைக்கு அவர்கள் விதைத்திருக்கிறார்கள் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன்.

இந்த ஆட்சிக்கு ஒரு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்று எண்ணுகின்ற நண்பர்கள் எண்ணம் பலிக்காமல், நாங்கள் தொடர்ந்து மக்களுடைய ஆதரவை பெற்றுக்கொண்டே இருக்கிற காரணத்தால், அந்த ஆதரவுக்கு குறுக்கே ஏதாவது செய்ய வேண்டும் என்று இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு போய் விட்டார்கள் என்றால், தேர்தல் ஆணையமே எங்களோடு ஒத்துழைப்பது போலவும், எங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பது போலவும் சொல்கிற அளவுக்கு வந்து விட்டார்களே.

காரணம் 9ஆ‌‌ம் தேதிக்கு பின்னர் வரப்போகின்ற தேர்தல் முடிவு அவர்களை இப்போதே அச்சுறுத்த ஆரம்பித்து விட்டது. எனவே முன்கூட்டியே காரணம் சொல்லி தப்பித்து விடுவோம் என்று அவர்கள் தயாராகி விட்டார்கள். அது எனக்கு நன்றாக தெரிகிறது. அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

படாதபாடுபட்டு பொய் சொல்லி, தேர்தல் முடிவுக்கு கட்டியம் கூறுகிறார்கள். வெற்றி நிச்சயம். எனவே, அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டோரும், கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒத்துழைத்து தேர்தலில் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil