தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும் என்று வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி ரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர்கள் எம்.ஐயப்பன், ஜி.சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது பேசிய ஐயப்பன், மாநிலம் முழுவதும் நடத்தப்போகும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதிதான் இது என்றார்.
இதேபோல் திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம், லால்குடி, புல்லம்பாடி மற்றும் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.