2006ஆம் ஆண்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் அ.இஅ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.சின்னசாமி வெற்றி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சவுந்தர் ராஜன் போட்டியிட்டார். இதில் 14 வாக்குகள் வித்தியாசத்தில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் சின்னச்சாமி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து சவுந்தர் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "தபால் ஓட்டுக்கள் சரியாக எண்ணப்படவில்லை'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீதிபதி நாகப்பன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
அப்போது, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.