தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் துணை அவைத் தலைவர் பி.சீனிவாசன் இன்று மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது (71). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர்.
மூளையில் ரத்தப் பெருக்கு ஏற்பட்டத்தை தொடர்ந்து அவர், சென்னையில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
நேற்று கடும் பாதிப்பு ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்த மருத்துவர்கள், இன்று காலை 6 மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை உடல் தகனம் நடைபெறுகிறது.
தகவல் அறிந்து அமெரிக்காவில் இருக்கும் அவரது மகள் வந்து கொண்டிருக்கிறார்.
1967 ஆம் ஆண்டு விருதுநகரில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜை தோற்கடித்த சீனிவாசன், 1971ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை துணை அவைத் தலைவரானார். பின்னர் 1989ல் சிவகாசி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடைசியாக அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர், நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.