பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 7, 9, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வரும் 8, 10, 14 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.
அதேபோல் கோவையிலிருந்து சென்னைக்கு வரும் 13ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு செல்லும்.
இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் 13ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், சேலம், ஈரோடு, மதுரை வழியாக மறுநாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.