கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிங்களப் படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் கிளிநொச்சி பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் நேற்று கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அதன்படி, அங்கு 2 காவல்துறை ஆய்வாளர், 2 உதவி ஆய்வார்கள், 12 சட்டம் ஒழுங்கு காவலர்கள், 30 ஆயுதப்படை காவலர்கள், 30 சிறப்பு அதிரடிப்படையில் (எஸ்எஸ்ஜி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.