எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி. சுகுமார் நேற்று மதியம் மரணமடைந்தார். அவருக்கு வயது (60). சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சுகுமார் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் திடீரென மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை மதியம் அடக்கம் செய்யப்படுகிறது.
எம்.ஜி.சி.சுகுமாருக்கு துளசி என்ற மனைவியும், 13 வயதில் மேனகா என்ற மகளும் உள்ளனர்.
மரணமடைந்த சுகுமார், ர். சினிமா தயாரிப்பாளராகவும், சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.