நெல்லையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்தவரின் மனைவிக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி அம்பாசமுத்திரம் வட்டம், கன்னடியன் கால்வாயில் தவறி விழுந்து இறந்த செய்தி சபாநாயகர் ஆவுடையப்பன் மூலம் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இத்துயர சம்பவத்தால் மிகுந்த வேதனையடைந்த முதலமைச்சர் கருணாநிதி இறந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருப்பதுடன் வறுமை நிலையில் வாடும் தங்கபாண்டியின் மனைவி லட்சுமிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.