சென்னையில், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், இராஜாஜி மண்டபம், பக்தவச்சலம் நினைவு மண்டபம், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகள் மண்டபம் வளாகங்களில் ரூபாய் 78 இலட்சம் செலவில், “ஏர்செல்” நிறுவனத்தினர் செய்துவரும் மேம்பாட்டுப் பணிகள், பூங்காக்கள், நீரூற்றுகள் அமைக்கும் பணியை அமைச்சர் பரிதிஇளம் வழுதி ஆய்வு செய்தார்.
மேலும் புல்வெளி அமைத்தல், பலவகையான அழகிய தாவரங்கள் நடும் பணிகள், வாகன நிறுத்துமிட பணிகள், நடைபயிற்சிக்கான பாதைகள் அமைக்கும் பணிகள், வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, தக்க அறிவுரைகளை அமைச்சர் வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.
அப்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஆ.சி.மோகன்தாஸ், 'ஏர்செல்' நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் பாஸ்கர் மற்றும் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள், செய்தித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.