திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானின் குடும்பத்தினர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானுடைய மாமியார் தெய்வானையம்மாள், நாத்தனார் அ.நளினா, கொழுந்தனார்கள் ரவி, கண்ணன், அவருடைய மனைவி வானதி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை அ.இ.அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
அப்போது இவரது குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனா, பூரணசந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். அவர்களை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரவேற்று அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் கார்டை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.