தமிழக அரசு பேருந்தை தேசப்படுத்திய தமிழ்நாடு அனைத்து கவுண்டர்கள் சங்கத்தை சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் தீரன் சின்னமலை சிலையை அமைக்கக் கோரி 500க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களை அவர்கள் சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.
தமிழ்நாடு அனைத்து கவுண்டர்கள் சங்கம் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் 15 தமிழக அரசு பேருந்துகள், இரண்டு கார், இரண்டு ஆட்டோக்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது.