சென்னை மருத்துவமனையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அனுமதி
, திங்கள், 29 டிசம்பர் 2008 (16:55 IST)
சென்னை: இலேசான மாரடைப்பு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை திருமங்கலம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.