Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 நாள் விடுமுறை அளித்தால் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு ரத்து: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி

Advertiesment
2 நாள் விடுமுறை அளித்தால் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு ரத்து: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி
, திங்கள், 29 டிசம்பர் 2008 (16:16 IST)
வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்று தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடித்தால் தொழிற்சாலைகளுக்கு முழுமையான மின்சாரத்தை வழங்கலாம் எ‌ன்று ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

சென்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் ‌மி‌ன்சார‌த்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் தொழிற்சாலை அதிபர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

TN.Gov.TNG
கூட்டம் முடிந்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஆற்காடு வீராசாமி, வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்று தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடித்தால் தொழிற்சாலைகளுக்கு முழுமையான மின்சாரத்தை வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இரண்டில் 2வது உள்ள முறையே வேண்டும் என்று தொழில் அதிபர்கள் விருப்பம் தெரிவித்தனரஎ‌ன்றா‌ர்.

எனவே முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று ஜனவரி மாதம் 1ஆ‌ம் தேதி முதல் 2 நாள் விடுமுறை விடும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் முழுமையான மின்சாரம் வழங்குவது என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

மாணவர்கள் தேர்வு எழுதுவதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ஆ‌ம் தேதி வரை தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசு மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது என்ற தடை தொடர்ந்து நீடிக்கும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி, தற்போது மத்திய அரசிடம் கேட்ட மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைத்து வருகிறது. ஜனவரி 15ஆ‌ம் தேதிக்குள் மேலும் 500 மெகாவாட் மின்சாரம் கொடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil