தி.மு.க. தலைவராக 10-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 10-வது முறையாக கட்சித் தலைவராக முதல்வர் கருணாநிதியும், பொதுச் செயலராக அன்பழகனும், பொருளாளராக மு.க.ஸ்டாலினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன் பின்னர் முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், 10-வது முறையாக கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்ட்டதற்கு முதல்வர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார் என்று தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.