கடலாடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரணவநாதன் (60), இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்தவர் பிரணவநாதன். 1984 முதல் 86 வரை கடலாடி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கடலாடி ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்தார். பின்னர் ம.தி.மு.க.வில் சேர்ந்து ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரானார். அதன்பின் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்தார்.
கட்சி வேலையாக சென்னைக்கு சென்றிருந்த பிரணவநாதன், நேற்றிரவு தனியார் பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை இளையான்குடி அருகே பேருந்து வந்தபோது பிரணவநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பேருந்திலேயே அவர் இறந்தார். அவருக்கு மனைவியும் 4 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர்.